Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனம் விட்டுப் பழகுங்கள்

மனம் விட்டுப் பழகுங்கள்

மனம் விட்டுப் பழகுங்கள்

மனம் விட்டுப் பழகுங்கள்

ADDED : டிச 13, 2008 10:40 AM

Google News
Latest Tamil News

* வாழ்க்கையை உருவாக்குவது சக்தியே. அதுவே பொருள்களுக்கு உயிர்ப்பைக் கொடுக்கிறது. அது சரிவர இயங்காவிடில் அமைதி குலைந்து போகிறது. எல்லோரிடமும் உள்ள சக்தி இணைந்தால் அதுவே நன்மையைத் தரும் பெரிய இயக்கமாக மாறுகிறது. அதுவே பிரிந்தால் கலவரத்தை உண்டு பண்ணுகிறது.
* பிரிப்பதும், பிரித்து ஆள்வதும் மனித அழிவிற்குத் தான் வழிவகுக்கும். மனித வளர்ச்சி, மேம்பாடு இவையெல்லாம் அது ஒற்றுமை என்னும் தெய்வீகத்தால் மட்டுமே முடியும். ஒற்றுமை தெய்வீக சக்தியைத் தரும். பிரிவினை மிருகசக்தி தருகிறது.
* செய்யப் போவதையே சொல்லுங்கள். சொன்ன வண்ணம் செயல்படுங்கள். அன்பின் மூலம் உணர்ந்து செயல்படுங்கள். அந்த முயற்சியும், அன்பும் சேர்ந்து கனிவது தான் சேவை.
* கடவுளிடம் சரணாகதி அடைவது என்பது நம்முடைய காரியங்களை எப்படியோ பார்த்துக் கொள்வான் என்று விட்டு விடுவது அல்ல. நம்மை நாமே உணர வேண்டும். வெற்றியால் மமதையோ, தோல்வியால் சோர்வையோ கொள்ளக்கூடாது
* தனித்து வாழாதீர்கள். ஒதுங்கி இராதீர்கள். மனம் விட்டுப் பழகுங்கள். ஒற்றுமை உணர்வு எங்கும் மலர உதவுங்கள். எல்லோரும் சேர்ந்தால் உறவு உறுதியாகும்.

Our Apps Available On

Dinamalar

Follow us